பதிவு செய்த நாள்
18
ஜூன்
2024
12:06
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி. நகர் ஸ்ரீ வீரவிநாயகர், ஸ்ரீவீரத்துர்க்கை அம்மன், ஸ்ரீஆகாச வில்வேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்று முன்தினம் கணபதி வழிபாடு, மஹாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், சிவமூலமந்திர ஹோமம் கோ பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. இதனைத் தொடர்ந்து கோபுர சுவாமிகள் கண் திறப்பு, சுவாமி பிம்பசுத்தி சுவாமி சையனாதீவாசம் நடந்தது. மதியம் முளைப்பாரி அழைத்தல் தீர்த்தக்காவடி அழைத்தல் நடந்தது. அன்று இரவு மங்கள இசை, குரு வந்தனம், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதற் கால யாக வேள்வி நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, மூலவருக்கு ரக்ஷாபந்தனம், இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், தீபாரதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து அருள் சக்தி கரங்கள் புறப்பாடு நடந்தது. வீர விநாயகர், துர்க்கை அம்மன், ஆகாச வில்வேஸ்வரர் கோயில், நவக்கிரக நாயகர்கள் சன்னதி ஆலய கலசங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தம் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஏ.பி.பி. நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வீர விநாயகர் திருக்கோயில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.