சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2024 06:06
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஜூன் 10ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கி 17 நாட்கள் நடக்கிறது. தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார். இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்தும், அலகு குத்தியும், கரும்பு தொட்டில் சுமந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பூப்பல்லக்கு நடக்கிறது. நாளை (ஜூன் 19) பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.