திருப்பதி; பக்தர்களின் வசதிக்காக திருமலையில் அதிகாரிகள் வெள்ளை நிற கூல் பெயின்ட் அடித்தனர்.
திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் உத்தரவின்படி, பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வெயிலால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கூல் பெயின்ட் அடித்தனர். திருமலை கோகுலம் ஓய்வறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொறியியல் துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டத்தில், பக்தர்களின் வசதிக்காக ஒயிட் கூலன்ட் பெயின்டிங் பணியை உடனடியாக மேற்கொள்ள இஓ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவின்படி, ஸ்ரீவாரி கோயில், பேடி ஆஞ்சநேய சுவாமி கோயில், வாகன மண்டபம், ரம்பாகீச்சா மற்றும் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நான்கு மாட வீதிகளில் வெள்ளைக் கூல் பெயின்ட் அடிக்கப்பட்டது.