சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே ராகலாபுரம் ஊராட்சிக்கு புங்கம்பாடியில் மகா கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி இன்று திருச்செந்தூர், ராமேஸ்வரம், அழகர் கோயில் மலை, திருமலைகேணி உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து பூர்ணாகுதி, வேதபாராயனம், தீபாரதனை உள்பட 2 கால யாக பூஜைகள், நவபாஷனத்தால் செய்யப்பட்ட யந்திர பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க தீர்த்தக் குடங்கள் கோவிலின் உச்சிக்கு எடுத்த செல்லப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கடஜோதி பட்டாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.இதில்சுற்று வட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.