சென்னை தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூன் 2024 04:06
சென்னை; முத்தியால்பேட்டை, லிங்கிச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது தர்மவிநாயகர் தர்மராஜா கோயில். இங்கு திரௌபதி அம்மன் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று (18 ம் தேதி) திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இன்று அர்சுனன் பாசுபத அஸ்திரம் பெறுதல் நடைபெற்றது. நாளை சுபத்திரை திருக்கல்யாணம் நடக்க உள்ளது. தொடர்ந்து 21ம் தேதி பாரிவேட்டை உற்சவமும், முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா 23ம் தேதியும் நடக்கிறது. 25ம் தேதி உற்சவ சாந்தி அபிஷேகம் மற்றும் திரௌபதி அம்மன் ஏகாந்த சேவையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தர்ம விநாயகர் மற்றும் தர்ம ராஜா திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.