பதிவு செய்த நாள்
19
ஜூன்
2024
06:06
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையிலுள்ள மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில், பவுர்ணமி தோறும், 14 கி.மீ., துார மலையை பக்தர்கள் வலம் வந்து கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆனி மாத பவுர்ணமி கிரிவலத்திற்கு, 21ம் தேதி காலை, 7:45 மணி முதல், மறுநாள், 22 காலை, 7:19 வரை பவுர்ணமி திதி உள்ளதால், இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.