ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி, அயோத்திக்கு பாதயாத்திரை; குழுவிற்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2024 10:06
தேவகோட்டை; அயோத்தி, வாரணாசி பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்திய மக்களின் நலன் வேண்டியும், இந்தியா அமைதி நிலவி வளர்ச்சி அடையவும் வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டி பச்சைகாவடி தலைமையில் ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசிக்கும், தொடர்ந்து அங்கிருந்து 225 கி.மீ. தூரத்தில் உள்ள அயோத்திக்கும் தமிழகத்தில் இருந்து முதல்முறையாக பாதயாத்திரை செல்கின்றனர். 13 வது முறையாக காசி யாத்திரை செல்லும் இந்த பாதயாத்திரை குழுவில் ஓய்வு பெற்ற சிவகங்கை எஸ்.ஐ. பாலகுரு உட்பட காரைக்குடி, குழிப்பிறை, சீனமங்கலம் , சென்னை, திருச்சி உட்பட பல ஊர்களில் இருந்து 33 பேர் 2715 கி.மீ. தூரம் பாதயாத்திரை செல்கின்றனர். இவர்களுடன் சமையல் பணிக்காக 5 பேர் செல்கின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட குழுவினர் நேற்று முன்தினம் தேவகோட்டை வந்தனர். பாதயாத்திரை குழுவிற்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இந்த யாத்திரை வழிநடத்தி செல்லும் பச்சை காவடி கூறியது, இந்திய மக்களின் நலன் வேண்டி செல்கிறோம். மேலும் வாரணாசியில் நகரத்தாரின் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த சொத்துக்களை மீட்டு தந்து , மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றமைக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தும் யாத்திரை செல்கிறோம். வாரணாசியில் இருந்து 10 பாதயாத்திரையாக முதல்முறையாக அயோத்திக்கு ராமர் கோவிலுக்கு செல்கிறோம் என தெரிவித்தார்.