பதிவு செய்த நாள்
20
ஜூன்
2024
10:06
திருப்பூர் அருகே சர்க்கார் பெரியபாளையம், கருப்பண்ணசாமி, கன்னிமார் தெய்வம், சின்னண்ணன், பெரியண்ணன் சுவாமி கோவில், பொங்கல் விழா நடந்தது. அண்ணமார் சுவாமி கோவிலில், கடந்த, 18ம் தேதி படைக்கலம் எடுத்து வந்து, பூசாரிகளின் பலி பூஜைகள் நடந்தன. சுவாமி ஆட்டத்துடன், தீப்பந்தம் ஏந்தி அருள்வாக்கு கூறப்பட்டது. நேற்று, காலை, பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் கிடா வெட்டி, வேண்டுதலை நிறைவேற்றினர். சுவாமிகளுக்கு மாலை அணிவித்தும், பாதக்கொரடு, அரிவாள், தடி, தண்டாயுதம் போன்றவற்றை சாற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.