பாகூர் மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2024 12:06
பாகூர்; பாகூர் வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில் தேர் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பாகூர் மூலநாதர் கோவில் 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு, தினமும் இரவு அதிகார நந்தி, யானை, சிங்கம், மயில், ரிஷபம் உள்ளிட்ட வானங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று 20ம் தேதி காலை 8.00 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக சுவாமி சிறப்பு பூஜைகளுக்கு பின் தேரில் எழுந்தருளினார். தேரரோட்டத்தில், புதுச்சேரி கவர்னர் சி.பி. ராதாக்கிருஷ்ணன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்.