பெருமாள் கோயில்களில் ஜேஷ்டாபிஷேக விழா; அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2024 10:06
பரமக்குடி; பரமக்குடி பெருமாள் கோயில்களில் ஹோமம், அபிஷேக ஆராதனைகளுடன் ஜேஷ்டாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. பரமக்குடி சுந்தர்ராஜ் பெருமாள் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு அனுக்கை, கும்ப ஸ்தாபனம் செய்யப்பட்டது. பின்னர் ஹோமங்கள், மகா பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து சுந்தர்ராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவியம் என அபிஷேகம் நடந்தது. மேலும் கலசங்களில் இருந்த புனித நீர் சுவாமிகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.
*இதேபோல் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது அர்ச்சகர்கள் ஹோமங்கள் செய்து, பூர்ணாகுதிக்கு பின் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் இரவு கருட வாகனத்தில் பெருமாள் வீதி வலம் வந்தார்.