மேலுார்; உறங்கான்பட்டி காளமேகப் பெருமாள் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 16 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று கிராமத்து சார்பில் செய்யப்பட்ட மற்றும் நேர்த்திக்கடன் புரவிகள் மந்தையில் இருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.