ஆனி இரண்டாம் செவ்வாய்; சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2024 12:06
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 01 ல் உள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் வெண்பட்டு வஸ்திரத்தில் முருகப்பெருமானும் நீலம் மற்றும் பச்சை வஸ்திரத்தில் வள்ளி தெய்வானை தெய்வங்களும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.