தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2024 11:06
திண்டிவனம்; தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஊஞ்சல் உற்வசம் நடந்தது. திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை வேள்வியும் மற்றும் பூஜிக்கப்பட்ட கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் பூஜிக்கப்பட்ட கலச நீரால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் உற்சவர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் உட்பிரகாரம் வலம் வந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.