விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள பூவரசன்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. கல்தூணில் நரசிம்மர் தோன்றி காட்சியளித்த இடத்தில் பல்லவ மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் தென்அஹோபிலம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோவிலில் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து சுவாமி தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.