திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி.. நாராயண மந்திரம் பாடி வழிபட்ட பாடகி பி.சுசீலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2024 02:06
திருப்பதி; சினிமாவில் முன்னணி பாடகிகளில் ஒருவர் பி.சுசீலா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். முதல் தேசிய விருது பெற்ற பாடகி என்ற பெருமைக்குரியவர். வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருக்கும் பாடகி பி.சுசீலா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கையை செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தார். நாராயண மந்திரம் பாடலை பாடிக்கொண்டு அவர் திருப்பதியில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.