ஷீரடி சாய் பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு; அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2024 04:06
எரியோடு; எரியோட்டில் மின்வாரிய அலுவலகம் எதிர்புறம் ஷீரடி சாய்பாபா கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் அபிஷேக ஆராதனை வழிபாடு நடக்கிறது. வியாழக்கிழமையான இன்று சிறப்பு வழிபாடாக பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய அபிஷேகங்களுடன், அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை நிர்வாகி சவடமுத்து, விழா குழவினர் செய்திருந்தனர்.