Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி ... திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள்; 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் திருத்தணி கோவிலில் குவிந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
புதுச்சேரியில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2024
10:07

புதுச்சேரி; புதுச்சேரியில் நடந்த ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம், புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் இணைந்து, 6வது முறையாக, புதுச்சேரியில் நேற்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்தியது. இதற்காக திருப்பதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை, ஸ்ரீநிவாசா கல்யாண ரதத்தில், புதுச்சேரி வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சுவாமிக்கு, புதுச்சேரி எல்லை, மொரட்டண்டி டோல்கேட்டில், ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவர் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் டிரஸ்ட் இணை தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமையில், மங்கள வாத்தியங்கள் முழங்க, வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எழுந்தருளி, கல்யாண ரதத்தில் காட்சியளித்த ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8:00 மணி வரை, பள்ளி கலையரங்கில், ஸ்ரீநிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை சுப்ரபாதம் மற்றும் தோமாலை சேவை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து லாஸ்பேட்டை விமான நிலையம் எதிரே உள்ள ஹெலிபேடு மைதானத்தில், நேற்று மாலை 4:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன், டிரஸ்ட் இணை தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினர். சிவசங்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar