திருமலை முதல் காட் ரோட்டில் தீ பிடித்தது.. விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த ஊழியர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2024 02:07
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல பேருந்து, தவிர ஏழு மலைகளைக் கடந்து படிகள் வழியாக திருமலையை அடையலாம். திருமலை அலிபிரி என்று அழைக்கப்படும் அடிவாரத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருப்பதியிலிருந்து டவுன் பஸ் மூலம் அலிபிரியை அடையலாம். அலிபிரி என்றால் ஆடிப்பாடி. அலிபிரியில் கருடாழ்வார் இரு இறக்கைகளையும் விரித்து, கூப்பிய கைகளுடன் பெருமாளை வணங்குவது போல் காட்சியளிக்கிறார். காட் ரோடு வழியாகத்தான் முற்காலத்தில் ஆழ்வார்கள், ரிஷிகள், யோகிகள் மற்றும் பெரிய மன்னர்கள் மலை ஏறி திருமலைக்குச் சென்று பெருமாளை வழிபட்டனர். இதை மனதில் வைத்துக்கொண்டு ஒருவர் ஏறினால் சோர்வு ஏற்படாது. மலை அடிவாரத்தில் பக்தர்கள் தங்களுடைய பயணம் எந்தவித இடையூறும் இன்றியும், சிரமமும் இன்றி நிறைவேற வேண்டி தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர். சிலர் ஒவ்வொரு கல்லிலும் கற்பூரம் ஏற்றுவார்கள். திருமலைக்கு வந்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டதால் திருமலை முதல் காட் ரோட்டில் 31வது திருப்பத்தில் தீ பிடித்தது. விரைந்து செயல்பட்ட திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.