வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் கிருத்திகை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2024 05:07
திருப்பூர்; திருப்பூர், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோயிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர் கல்யாண சுப்பிரமணியர், உற்ஸவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.