திருமலையில் ஹம்பி மடாதிபதி வித்யாரண்ய பாரதி தீர்த்த சுவாமிகள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2024 01:07
திருப்பதி; ஹம்பி மடத்தின் ஸ்ரீ விருபாக்ஷா வித்யாரண்ய மகாசம்ஸ்தானத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு வித்யாரண்ய பாரதி சுவாமிகள் இன்று சனிக்கிழமை வெங்கடேஸ்வரா கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள ஸ்ரீவிருபாக்ஷி வித்யாரண்ய மகாசம்ஸ்தானத்தின் மடாதிபதி வித்யாரண்ய பாரதி தீர்த்த சுவாமிகள் தன் சீடர்களுடன் இன்று திருமலைக்கு வந்தார். கோயில் முறைப்படி அவரை ஏழுமலையான் கோயில் வாசலில் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். கொடிமரத்தை வணங்கியபடி ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர்.