கன்னிமார் கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா; வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 03:07
பரமக்குடி; பரமக்குடி சத்தேழு கன்னிமார் அம்மன் கோயிலில் அருள்பாலிக்கும் வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடக்கிறது.
பரமக்குடி அனுமன் கோயில் பின்புறம் சத்தேழு பெரிய கன்னிமார்கள், 18ம் படி கருப்பணசாமி கோயில் உள்ளது. இங்கு சொர்ண வராஹி அம்மன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 6 அன்று துவங்கியது. அன்று முதல் தினமும் காலை 8:30 மணிக்கு அபிஷேகம், மாலை 6:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதன்படி அம்மன் சந்தன காப்பு வெள்ளி கவசம் சாற்றி அருள் பாலித்து வருகிறார். மேலும் ஜூன் 14 காலை 9:00 மணிக்கு உலக மக்கள் நன்மைக்காக மகா யாகமும், மறுநாள் மாலை 5:30 மணிக்கு வராஹி அம்மன் வீதி உலா நடக்கிறது. தொடர்ந்து 9 நாட்கள் 9 அலங்காரங்களில் அம்மன் அருள் படுக்கிறார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.