திருச்செந்தூர் முருகப்பெருமானுக்கு காசு மாலை காணிக்கை அளித்த பக்தர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2024 04:07
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடாகும். இத்தலம் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. பல சிறப்பு மிக்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழியை போஸ் - மல்லிகா குடும்பத்தினர் ரூ.70 லட்சம் மதிப்பிலான 978 கிராம் எடை கொண்ட தங்க காசு மாலையை நேர்த்திகடனாக வழங்கினர். கோயில் இணை கமிஷனர் கார்த்திக் காணிக்கை பெற்றுக்கொண்டார்.