கோட்டையூர் பெரியநாயகி அம்மன் கோயில் கிடா வெட்டு ரத உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2024 10:07
காரைக்குடி; கோட்டையூரில் உள்ள கோ. வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் கிடா வெட்டு ரத உற்ஸவத்தை முன்னிட்டு வழி நெடுகிலும் கிடா வெட்டி மக்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட கோ. வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் கிடா வெட்டு திருவிழா கடந்த ஜூலை 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அம்பாள் திருவீதி உலா, வயல்நாச்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி, இரவு வயல்நாச்சி அம்மன் கோயிலில் இருந்து அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியில் நடந்தது. நேற்று காலை வயல்நாச்சியம்மன் கோயிலில் அபிஷேகம் மற்றும் தீபாராதனையை தொடர்ந்து பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகமும், மாலையில் கிடா வெட்டு ரத உற்ஸவம் நடந்தது. இன்று அம்மன் திருவீதி உலாவும் மாலை மஞ்சள் நீராடுதல் , இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.