பதிவு செய்த நாள்
10
ஜூலை
2024
12:07
காளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிடும் பணியில் இன்று கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர் அதில் கடந்த 19 நாட்களில் ரொக்கப் பணமாக - 1,32,32,171 ( ஒரு கோடியே முப்பத்து இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து நூற்று எழுபத்தி ஒரு ரூபாய்) தங்கம் :-92. கிராம், வெள்ளி :- 1, கிலோ 160. கிராம், நித்யா அன்னதானம் உண்டியல் மூலம் ரூ.32,231, வெளிநாட்டு பணம்: யு.எஸ்.ஏ - 1431. டாலர்கள், மலேசியா - 1016. ரிங்கிட்ஸ், ஆஸ்திரேலியா - 20. டாலர்கள், சிங்கப்பூர் - 17. டாலர்கள், கனடா -5 டாலர்கள், யூரோ - 10 யூரோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 605 திராம்கள், வருமானமாக வந்ததாக கோவில் செயல் அலுவலர் ஏ. வெங்கடேசு தெரிவித்தார்.இந்த உண்டியல் பணம் கணக்கிடும் பணியில் பங்கேற்பாளர்கள் கோயில் துணை செயல் அலுவலர்கள் ரவீந்திர பாபு, எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி, வித்யாசாகர் ரெட்டி, ஹரிமாதவ் ரெட்டி, தனஞ்செயா மற்றும் மேற்பார்வையாளர்கள் - கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, பாலரங்கசாமி, மல்லிகார்ஜுனா தேவஸ்தான ஊழியர்கள், யூனியன் வங்கி காணிப்பாக்கம் கிளை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.