கோவை; செல்வபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று விநாயகர் பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, முதல் கால வேள்வி நடந்தது. இன்று இரண்டாம் கால வேள்வி பூஜையும், அதனைத்தொடர்ந்து, 7:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, அய்யனார் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிகள் தலைமையில், கோவில் விமானத்திற்கும், முத்துமாரி அம்மனுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, முத்துமாரி அம்மனுக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் விழா கமிட்டியினர், விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.