Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்ன திருப்பதி பிரசன்ன வெங்கடரமண ... மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கருவறை பாலாலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பாலாலயம்; கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பாலாலயம்; கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2024
11:07

பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ள நிலையில், திருப்பணிகள் துவங்குவதற்காக பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.


பொள்ளாச்சி அருகே உள்ள, பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கடந்த, 2000, 2010ம் ஆண்டில், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், சட்டசபையில், மாசாணியம்மன் கோவில், கும்பாபிஷேகம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, பாலாலயம் நேற்று நடந்தது. அறங்காவலர் குழுத் தலைவர் முரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார். எம்.பி., ஈஸ்வரசாமி, எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


எம்.எல்.ஏ., அதிருப்தி; பாலாலயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.தி.மு.க.,வை சேர்ந்த வால்பாறை எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி திடீரென வெளியேறினார். அதன்பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘பாலாலயம் நிகழ்ச்சி காலை, 9:00 முதல் 11:00 மணி வரை என, தெரிவிக்கப்பட்டது. நான், 9:10 மணிக்கு வந்து விட்டேன். எம்.பி., வருவதற்கு காலதாமதம் ஆனது. அனைவருக்கும் சந்தனப்பொட்டு வைக்கப்பட்டது. ஆனால், எனக்கு சந்தனப்பொட்டு வைக்கவில்லை. மக்கள் பிரதிநிதிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. இது குறித்து, கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளேன்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar