பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான கிரி வீதியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கருவறை பாலாலயம் நடந்தது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோயில்களான கிரி வீதியில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு விமான பாலாலயம் 2022 ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. கட்டிட பணிகள் கோயிலுக்கு அருகில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று உள்ளன. இந்நிலையில் கருவறை பாலாலய பூஜையில் அனுமதி பெறுதல், தலப்புனிதமாக்கல், திருக்குடம் நடந்து, ஜூலை 9, மாலை 7:30 மணிக்கு முதற் கால வேள்வி துவங்கியது. இரவு முதற்கால வேள்வி நிறைவடைந்தது. நேற்று (ஜூலை 10) அதிகாலை கருவறை பாலாலயம் நடைபெற்றது. அதில் அனுஞ்கை, வாஸ்து பூஜை, ஸ்தபதி பூஜை, கணபதி பூஜை, யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் அத்தி மரத்தில் பாலாலயம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் லட்சுமி கண்காணிப்பாளர் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.