அதிகார நந்தி வாகனத்தில் காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2024 05:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டிற்கான உற்சவம் கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சப்பரத்தில் அம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா வந்தார். இரவு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. இரண்டாம் நாள் உற்சவமான ஜூலை 8ம் தேதி காலை சூரிய பிரபையும், இரவு சந்திர பிரபை உற்சவமும் நடந்தது. மூன்றாம் நாளான ஜூலை 9ம் தேதி, காலை பூத வாகனமும், இரவு ராவணேஸ்வர வாகன உற்சவமும் நடந்தது. நான்காம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் காலை நாக வாகனமும், இரவு ரிஷப வாகன உற்சவமும் நடந்தது. ஐந்தாம் நாள் உற்சவமான இன்று காலை 8:00 மணிக்கு அதிகார நந்தி வாகன உற்சவம் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மருகுவார் குழலி அம்பிகையுடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் ராஜ வீதிகளில் உலா வந்தார். நாளை காலை தேரோட்டம் நடைபெறுகிறது.