பதிவு செய்த நாள்
11
ஜூலை
2024
05:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய மீன்வளம், கால்நடைதுறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேலை, பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ராமநாதபுரம் மீன்துறை உதவி இயக்குனர் கோபிநாத், கோயில் குருக்கள் வரவேற்று அழைத்து சென்றனர். பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் மத்திய அமைச்சர், உறவினர்களுடன் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின் மத்திய அமைச்சருக்கு கோயில் குருக்கள் பிரசாதம் வழங்கினர். பின் அங்கிருந்து அமைச்சர் காரில் தனுஷ்கோடிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கடல்நீரை தலையில் தெளித்த மத்திய அமைச்சர், கடல் அழகை கண்டு ரசித்தார். பின் ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்த மத்திய அமைச்சர் காரில் மதுரைக்கு சென்றார்.