பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
10:07
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், சிவகாமி அம்மையார், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்திராயண புண்ணியகாலம் என அழைக்கப்படும், தை மாதம் முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்களில், ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில், ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி இன்று ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நடராஜர், சிவகாமி அம்மன், ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர், அங்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.