பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
11:07
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவில், பருவத ராஜகுல மீனவர் சமுதாயத்தினர், நடராஜர் மற்றும் சிவகாசுந்தரி அம்பாளுக்கு சீர்வரிசை செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தேர் திருவிழா நேற்று நடந்தது. மேல வீதியில் தேர் வந்தது. அப்போது, மூர்த்தி கபே உரிமையாளர் மோகன் தலைமையில் பருவத ராஜகுல சமுதாய மக்கள், வடக்கு மெயின் ரோட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க, ஏராளமான கிராம மக்கள், பாரம்பரிய வழக்கப்படி சீர் வரிசை கொண்டுவந்து, நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாளுக்கு செலுத்தி வழிப்பட்டனர். நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் சண்முகம், நிர்வாகிகள் கட்டபொம்மன், பிரபாகரன், குமார், மாரியப்பன், வக்கீல் சிவராஜ், இளங்கோ, கனகசபை, முருகன், விஜயகுமார், உதயஜோதி, சென்னை கூட்டமைப்பினர் தெய்வமணி, காமராஜ், கேசவமூர்த்தி, குமார், லட்சுமணன் உள்பட பருவதராஜகுல சிவன்படவர் மீனவர் சமுதாய மக்கள் பலர் கலந்து கொண்டனர். நடராஜருக்கு சீர் கொண்டுவந்தவர்கள் செல்வ விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி 26 ஆண்டுகள் ஆவதால், கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கும்பாபிஷேகம் நடத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பருவதராஜ சமூகத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்.