பூலோக கைலாயம்; திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2024 01:07
திருவொற்றியூர்; பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோவிலில் நடராஜருக்கு சிறப்பு திருமஞ்சன வைபவம் நடைபெற்றது.
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் என மூவராலும் பாடல் பெற்ற ஸ்தலமான திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி உடனூரை வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் சன்னதியில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன வைபவ விழா விமரிசையாக நடைபெற்றது. சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் சிறப்பு வாய்ந்தது. மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளுமாகிய சிவபெருமானின் மற்றொரு தோற்றமே நடராஜர் திருக்கோலமாகும். நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும் அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கும் நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மூலிகைகள் மற்றும் விசேஷ வாசனை திரவியங்கள் கொண்டு பால் இளநீர் தேன் மஞ்சள் சந்தனம் உள்ளிட்டவைகள் கொண்டு அபிஷேகம் செய்து பழங்கள் வைத்து தீப தூப ஆராதனை காட்டப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே இந்த அபிஷேகங்கள் நடராஜருக்கு நடைபெறும் என்பதால் ஏராளமான பக்தர்கள் காலை முதலே திருமஞ்சனத்தை காண காத்திருந்தனர் திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜர் அபிஷேகம் நிறைவு பெற்று புஷ்ப அலங்காரங்கள் மேற்கொண்டு பக்தர்களுக்கு பிரமாண்டமாக காட்சியளித்தார். ஆனி திருமஞ்சனத்தை ஏராளமான பக்தர்கள்தரிசனம் செய்தனர்.