திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2024 03:07
மயிலாடுதுறை; திருக்கடையூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலின் கிழக்கே பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோயிலில் அம்பிகையை வழிபட்டால் நோயற்ற நிறைவான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று மதியம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 10ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலைகளில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தன சரியாக 12:10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, ஸ்ரீமத் காமிக்காதி சிவாகம முறைப்படி கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர் கும்பாபிஷேகத்தை பால சர்வேஸ்வர குருக்கள் தமையிலானோர் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அங்காள பரமேஸ்வரி டிரஸ்ட் திருப்பணி குழுவினர் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.