மேலுார்; மேலுார் நாகம்மாள் கோயில், புதுசுக்காம்பட்டி இந்திரா நகரில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 10 முதல் யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம்கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார்கள் தட்சினாமூர்த்தி, ராஜா கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடந்தது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகங்களில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலுார் நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது குறிப்பிடதக்கது.