Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சிபுரி ஆதினம் சக்தி பீடத்தில் ... தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஆனி கடைசி சனி சிறப்பு பூஜை தாளக்கரை லட்சுமி நரசிம்மர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
12:07

மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.


மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள உலக பிரசித்திப்பெற்றதும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பௌர்ணமி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டிற்கான 10 நாட்கள் நடைபெறும் ஆடிப்பௌர்ணமி பெருந்திருவிழா இன்று திருக்கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில், கருடன் உருவம் பதித்த கொடியுடன் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக, கள்ளழகர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருக்கோவில் தங்கக் கொடிமரத்திற்கு பால், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகமும், மாலை அணிவித்து தீபாராதனையும் நடைபெற்றது. 


இதனைத்தொடர்ந்து, வரும் 17ம் தேதி புதன்கிழமை கள்ளழகர் தங்க பல்லக்கில் சிவகங்கை சமஸ்தான மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும். 20ம் தேதி சனிக்கிழமை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம். வரும் ஆடிப் பௌர்ணமியான ஜூலை 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6: 45 மணியிலிருந்து 07.20 மணிக்குள் வடம் பிடித்து இழுத்து நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று மாலை, அழகர்கோவில் ஶ்ரீ கள்ளழகர் திருக்கோவிலின் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி திருக்கதவுகள் திறக்கப்பட்டு படி பூஜைகளும், தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற உள்ளது. இதையடுத்து, வரும் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன், பத்து நாட்கள் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா நிறைபெற உள்ள நிலையில், விழாவிற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடங்கி உள்ளதாகவும்,  திருக்கோவில் நிர்வாகம் சார்பில் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும்  துணை ஆணையரான கலைவாணன் அறிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar