அவிநாசி கோவிலில் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் அருளிய 65 தேவார திருப்பதிகங்கள் விண்ணப்பம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2024 10:07
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் தேவார திருப்பதிகங்கள் விண்ணப்பம் நடைபெற்றது.
இதில் திருஞானசம்பந்த பெருமான் திருவிற்கோலம் தலத்தில் அருளிய 321 வது பதிகத்திலிருந்து திருநல்லூர்ப் பெருமணத்தில் அருளிய 385வது திருப்பதிகம் வரை வரலாற்று முறைப்படி முற்றோதல் நிகழ்ச்சி பண்ணிசை பேரறிஞர் கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவா மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக லிங்கேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் மண்டபத்தில் திருமுறை கண்ட பிள்ளையார்,நால்வர் பெருமக்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்த ஸ்வாமிகள் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கோவை அரண் பணி அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.