ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் உள்ள கோதண்டராமசுவாமி கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட கோதண்டராமசுவாமி கோயிலில் ஜூலை 5 முதல் 15 வரை ஆனி பிரம்மோற்ஸவ விழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் பல்லாக்கு, சிம்மம், ஆஞ்சநேயர், சேஷ உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 11ல் கோதண்டராமசுவாமி, சீதா தேவி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று (ஜூலை 14) காலை 10:00மணிக்கு தேரில் ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் திருத்தேரேற்றம் செய்து, பூஜையுடன் துவங்கி 11:30 வரை ரதவீதியில் தேரோட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் நகரமுக்கிய பிரமுரகர்கள், பக்தர்கள் பலர் பங்கேற்றனர். இன்று (ஜூலை 15) தீர்த்தோத்ஸவசம், இரவு தோளுக்கினியன் வாகனத்தில் சுவாமி எழுந்தருளுடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவுபெறுகிறது.