பச்சைவண்ணர் கோவில் வாசலில் தேங்கிய சகதிநீரால் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2024 03:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலையில் பச்சைவண்ண பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மகாவிஷ்ணு மரகத மேனியாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால், பச்சை வண்ண பெருமாள் என, அழைக்கப்படுகிறார். இக்கோவில் நுழைவாயில் அருகில், சாலை தரைமட்டத்தைவிட பள்ளமாக உள்ளதால், காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதியில் மழைநீர் தேங்கிசகதியாக மாறிவிடுகிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், அப்பகுதியில் வசிப்பவர்களும் தங்களது வீட்டிற்கு சகதியில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து தேங்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பக்தர்களின் நலன் கருதி பச்சைவண்ண பெருமாள் கோவில்அருகில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.