சேலம்: ஆடிப்பிறப்பையொட்டி சேலத்தில் இன்று தேங்காய் சுடும் நிகழ்ச்சி நடந்தது. அமானி கொண்டலாம்பட்டி பகுதியில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் தேங்காய்களை நெருப்பில் சுட்டனர்.
சேலத்தில், ஆடி, 1ம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பிரபல புரணாங்களை, இதிகாச கதைகளை மேற் கொள்ள காட்டி கொண்டாடப்படும் இந்த பண்டிகை நாளில், புதுமணத் தம்பதி, சிறுவர், சிறுமிகள் தேங்காயை சுட்டு சாமிக் கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில், இன்று சேலம் மாநகர், புறநகர் பகுதிகளில் நடந்த தேங்காய் சுடும் பண்டிகையில், புதுமண தம்பதி உட்பட திரளானோர் தேங்காய் சுட்டு குலதெய்வங்களுக்கும், தங்கள் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் வைத்து வழிபாடு மேற் கொண்டனர். சேலம் மாநகரில் சூரமங்கலம், அம்மாபேட்டை, பொன்னம்மா பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, அன்னதானப்பட்டி, அரிசிபாளையம் ஆகிய இடங்களில் தெருக்கள் தோறும் தேங்காய் சுடும் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது.