முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் செல்லிஅம்மன் கோயில் 48ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கடந்த 5நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக 2008 விளக்கு பூஜை நடந்தது. பின்பு செல்லிஅம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள், விபூதி, திரவியப்பொடி உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அம்மன் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. விழாவில் முதுகுளத்தூர் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.