பதிவு செய்த நாள்
14
நவ
2012
04:11
நற்செயல்களில் ஈடுபட்டு மனம் மகிழும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், ராகு அனுகூல பலன் தரும் வகையில் செயல்படுகின்றனர். செவ்வாயின் பார்வை ராசியில் பதிவதால் தகுதிக்கு மீறிய திட்டங்களை செயல்படுத்தவும் எண்ணம் ஏற்படலாம் கவனம். எவரிடமும் நிதானித்து பேசுவது அவசியம். சமூகப்பணியிலும் ஆர்வம் ஏற்படும்.வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியைப் பயன்படுத்துவது போதுமானது. புத்திரர் உங்களின் எண்ணத்தை நிறைவேற்றும் விதத்தில் பொறுப்புடன் செயல்படுவர். எதிரி இடம்மாறிப் போகிற நன்னிலை உண்டு.நோய் தொந்தரவு குறையும். பூர்வசொத்தில் வளர்ச்சி உண்டாகும். தம்பதியர் ஒற்றுமையுடன் செயல்பட்டு பெருமை சேர்ப்பர். திருமணயோகம் கைகூடும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சியை நடத்தி மகிழ்வீர்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி, விற்பனையை உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்வர். பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கிடைத்து வருமானம் உயரும். வியாபாரிகள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவருத்தி பணிகளை மேற்கொள்வர்.
வாடிக்கையாளர்களின் ஆதரவால் ஆதாயம் கூடும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நற்பெயர் காண்பர். சம்பள உயர்வு, சலுகைப்பயன் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.குடும்ப பெண்கள் உறவினர்களிடம் நற்பெயர் பெறும் விதத்தில் செயல்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைத்து சந்தோஷ வாழ்க்கை நடத்துவர். பணிபுரியும் பெண்கள் திட்டமிட்டுச் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகை பெற அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்து வளர்ச்சிப்பணியை நிறைவேற்றுவர். புதிய ஆர்டர் கிடைத்து லாபம் கூடும். அரசியல்வாதிகள் எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பர். மக்கள் பணியில் அதிகாரிகளின் உதவியும் கிடைக்கும். விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடியால் லாபத்தை அதிகரிப்பர். கால்நடை வளர்ப்பிலும் லாபம் கிடைக்கும். மாணவர்கள் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நன்கு படிப்பர்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவதால் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.
உஷார் நாள்: 18.11.12 பிற்பகல் 1.30 முதல் 20.11.12 மாலை 5.19 வரை மற்றும் 15.12.12 இரவு 9.24 முதல் நாள் முழுவதும்
வெற்றி நாள்: டிசம்பர் 5, 6
நிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6