உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன், செவ்வாய், குரு, கேது செயல்படுகின்றனர். இதனால் உங்கள் செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும். பணவரவுக்கான வாய்ப்புக்களை முறையாக பயன்படுத்துவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு கூடும். வாகனப் பராமரிப்பு பணிகளை நிறைவேற்றுவீர்கள். புத்திரர் திறமையுடன் செயலாற்றி சாதனை படைப்பர். அதிர்ஷ்டவசமாக சொத்து சேர்க்கை உண்டாகும். எதிரியினால் வந்த சிரமம் குறைந்து வாழ்வியல் நடைமுறை சுமூகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். அரசு தொடர்பான விஷயங்கள் நிறைவேற கடின முயற்சி தேவைப்படும். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்ப வாழ்வுக்கு பெருமை சேர்த்திடுவர். உறவினர்களுடன் ஆன்மிகச் சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. குடும்பத் தேவைகளை தாராள பணவரவில் திருப்திகரமாக நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருமானத்தை உயர்த்துவர். வியாபாரிகள் சந்தையில் போட்டி குறைந்து கூடுதல் ஆர்டர் கிடைக்கப்பெறுவர். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். படிப்படியாக சலுகைப்பயன் கிடைக்கும்.குடும்ப பெண்கள் தாராள பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். பணிபுரியும் பெண்கள் பணியில் திறமையை வெளிப்படுத்துவர். தாமதித்த சலுகைப்பயன் தற்போது வந்து சேரும். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் தொழிலை மேம்படுத்துவர். அரசியல்வாதிகள் பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்துவர். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயிகள் மகசூல் சிறப்பதோடு கால்நடை வளர்ப்பிலும் லாபம் பெறுவர். மாணவர்கள் ஒருமுகத் தன்மையுடன் படித்து தரத்தேர்ச்சி அடைவர்.
பரிகாரம்: சிவனை வழிபடுவதால் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும். உஷார் நாள்: 20.11.12 மாலை 5.20 முதல் 22.11.12 இரவு 11.51 வரை வெற்றி நாள்: டிசம்பர் 7, 8 நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 1, 8
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »