பிறரை வசீகரிக்கும் விதத்தில் செயல்படும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு புதன், சனி நல்ல பலன்களை வழங்குகின்றனர். ராசியில் உள்ள குரு, கேது இரண்டும் ஆன்மிக சிந்தனையுடன் செயலாற்ற வழிவகுப்பர். வருமானத்திற்கான புதிய வழிகளில் ஈடுபடுவீர்கள். சேமிக்கும் விதத்தில் பணமழை காண்பீர்கள். வீடு, வாகன வகையில் தகுந்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். புத்திரர் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் சிறந்து விளங்குவர். பூர்வ சொத்தில் வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். கடனில் பெரும்பகுதி அடைபடும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்பநலனைப் பாதுகாப்பர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியின் தரம்,விற்பனை ஆகியவற்றை உயர்த்த தேவையான நடவடிக்கையை மேற்கொள்வர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் ஆதரவோடு விற்பனை வளர்ச்சியும் ஆதாயமும் காண்பர். பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் குடும்பச்செலவில் சிக்கனத்தைப் பின்பற்றி சேமிப்புக்கு வழிவகுப்பர். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தியின் அளவை உயர்த்துவர். லாபவிகிதம் கூடும்.அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவால் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல், வருமானம் கிடைக்கும். மாணவர்கள் வெளிவட்டார பழக்கத்தைக் குறைத்து கவனமுடன் படித்து முன்னேறுவர்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் சிரமம் நீங்கி நன்மை அதிகரிக்கும். உஷார் நாள்: 16.11.12 காலை 10.41 - முதல் 18.11.12 பிற்பகல் 1.29வரை மற்றும் 13.12.12 மாலை 6.38 முதல் 15.12.12 இரவு 9.23 வரை வெற்றி நாள்: டிசம்பர் 3, 4 நிறம்: சிமென்ட், சந்தனம் எண்: 4, 6
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »