சீர்காழி மந்த கருப்பண்ணசாமி கோயிலில் முளைப்பாலி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2024 11:07
மயிலாடுதுறை; வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்ரீ மந்த கருப்பண்ணசாமி கோயில் முளைப்பாலி திருவிழா- திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் பழமை வாய்ந்த மந்த கருப்பண்ணசாமி, முன்னடியான், ஏழைக்காத்தம்மன், காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முலைப்பாலி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விரதம் இருந்து வளர்க்கப்பட்ட முளைப்பாலிகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க மயிலாட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து சென்று திருநகரி ஆற்றில் விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேண்டுதல் நிறைவேறிய நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் பிரதம் இருந்து முளைப்பாலி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் கட்டளை தம்பிரான் திருநாவுக்கரசு சுவாமிகள் கலந்து கொண்டு முளைப்பாலி திருவிழாவை துவக்கி வைத்தார்.