வீர அழகர் கோயிலில் திருக்கல்யாணம்: சுவாமி பூப்பல்லக்கில் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜூலை 2024 10:07
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.நேற்று திருக்கல்யாணத்திற்காக வீர அழகர் யானை வாகனத்தில் சவுந்தரவல்லி தாயார் மண்டபத்திற்கு முன் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் ஹோமங்கள் வளர்த்து பூஜை செய்து திருக்கல்யாணத்தை நடத்தினர். இன்று வீர அழகர் சுந்தரபுரம் கடைவீதி மண்டகப்படிக்கு எழுந்தருளி இரவு பூப்பல்லக்கில் வீதி உலா வருகிறார். ஜூலை 21ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேரோட்டமும், 22ஆம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்ஸவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.