கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார தின விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2024 01:07
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் உள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதரித்த தினத்தை முன்னிட்டு இன்று காலை 7:15 மணி முதல் 10:00 மணிக்குள் அவதார இல்லம் பட்டமான் கருப்பனேந்தல் மடம் தவச்சாலையில் அமைந்துள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் முதலாவது ஜீவ ஒடுக்கமான இடத்தில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூர்ணாகஹூதி பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை சுவாமிகளுக்கு பால்,பன்னீர், சந்தனம்,குங்குமம்,திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்டிக்குளம் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான அடியார்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார இல்ல பரம்பரை தர்மகர்த்தா பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சேகர்,தண்டாயுதபாணி மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.