பதிவு செய்த நாள்
20
ஜூலை
2024
02:07
பாலக்காடு; ஆடி அமாவாசையை ஓட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நாவா முகுந்தர் கோவிலில் நடந்து வருகிறது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே பாரதப்புழை ஆற்றின் கரையோரம் உள்ளது பிரசித்தி பெற்ற நாவா முகுந்தர் கோவில். 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும் இந்தக் கோவிலின் மறு கரையில், பிரம்ம மாற்றம் சிவன் கோவில்கள் அடுத்தடுத்து உள்ளனர். மாமாங்கம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடும். இந்தக் கோவிலுக்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவது வழக்கம். இந்த நிலையில் ஆடி அமாவாசை நாளான வரும் செம். 4ம் தேதி கோவில் ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் செய்து வருகின்றன.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன் கூறுகையில்: அம்மாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அன்றைய நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அமைத்து வருகிறோம். பக்தர்களின் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் 24ம் தேதி தாசில்தார் தலைமையில் உயர்தரப் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் நடக்க உள்ளன. 25ம் தேதிக்கு பிறகு அம்மாவாசை நாளில் தர்ப்பணம் செய்வதற்கான முன்பதிவு துவங்கும். அன்றைய நாள் தர்ப்பணம் செய்வோருக்கு திலக ஹோமம், சாயூஜிய பூஜை, தாமரை மாலை ஆகிய வழிபாடுகள் செய்து கொடுக்கப்படும். அதிகாலை 3 மணி அளவில் துவங்கும் தர்ப்பண சடங்குகளுக்கு தேவையான ஊழியர்களை பணியமர்த்தி உள்ளோம். தர்ப்பண நாள் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்திய உள்ளன. வாகனங்கள் பார்க் செய்ய சிறப்பு வசதிகள் அமைக்கப்படும். கோவிலுக்கு அரசு பஸ்கள் உட்பட கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9447188647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.