ஆடி முதல் சனி; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2024 03:07
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாறுக்கு வருகின்றனர். இந்நிலையில் சனி, ஞாயிறு உள்ளிட்ட இருதினங்கள் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதில் இன்று ஆடி முதல் சனியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகாலையிலிருந்து நளன்குளத்தில் குளித்துவிட்டு பின்னர் சனீஸ்வர பகாவனை தரிசனம் மேற்கொண்டனர். வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குடிநீர், பிஸ்கட், உணவுபிரசாதம் ஆகியவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் நலன் கருதி டிஜிட்டல் முறையில் இ.உண்டியல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தங்கள் செல்போன் மூலமாக காணிக்கை செலுத்தினர். மேலும் பக்தர்கள் நலன் கருதி பைபாஸ்சாலை, நளம்குளம், ஹெலிப்பேட் மைதனம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டது.கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.