Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் கோவில் தீமிதி ... தென்மலை கருப்புசாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடாய் வெட்டி வழிபாடு தென்மலை கருப்புசாமி கோயிலில் ஆண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
65 அடி உயரம்; 35,000 கிலோ எடையில் ராம்நகர் சாமுண்டீஸ்வரி அம்பாள் சிலை!
எழுத்தின் அளவு:
65 அடி உயரம்; 35,000 கிலோ எடையில் ராம்நகர் சாமுண்டீஸ்வரி அம்பாள் சிலை!

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2024
04:07

பெங்களூரை ஒட்டியுள்ளது ராம்நகர் மாவட்டம். இங்குள்ள ராமதேவர மலை புண்ணிய தலமாக விளங்குகிறது. அதே போன்று சாமுண்டீஸ்வரியும், இங்கு குடிகொண்டு அருள்பாலிக்கிறார்.


சாமுண்டீஸ்வரி பெயரைக் கேட்டால், மைசூரின் சாமுண்டி மலையில் குடிகொண்டுள்ள சாமுண்டீஸ்வரி தேவி நினைவுக்கு வருவார். கர்நாடகாவின் காவல் தெய்வமாக விளங்கும் சாமுண்டீஸ்வரிக்கு, மைசூரில் மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் கோவில்கள் உள்ளன. அதேபோன்று ராம்நகரிலும் கோவில் அமைந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ராம்நகர், சென்னப்பட்டணாவின், மாலுார் பேரூராட்சியின், கவுடகெரே கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோவில் அமைந்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தங்கள் கஷ்டங்களை அம்பாளிடம் கூறி, பிரார்த்தனை செய்கின்றனர். இங்குள்ள சிலை, மிகவும் பெரியது. சாமுண்டீஸ்வரி சிலை 35,000 கிலோ எடை கொண்டதாகும். 68 அடி உயரம் கொண்டது. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளையால் தயாரிக்கப்பட்டுள்ளது. 18 கைகள் கொண்டுள்ள இந்த அம்பாள் சிலை, சாந்த சொரூபினியாக செதுக்கப்பட்டுள்ளது. இதை கண்களால் பார்ப்பதே பாக்கியம் என்பது, மக்களின் நம்பிக்கை. 


வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கும் பக்தர்கள், ராம்நகரின் சாமுண்டீஸ்வரியை தரிசித்து பிரார்த்தனை செய்கின்றனர். அம்பாளை தரிசித்து, ஏழு வாரங்கள் தேங்காய் கட்டினால், நினைத்தது நடக்கும், கஷ்டங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி, இங்குள்ள நந்தி சிலையின் கீழே அமர்ந்து, தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டால், நோய்கள் குணமாகும். சாமுண்டீஸ்வரி கோவிலில், பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் நடக்கிறது.


எப்படி செல்வது?; காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். ராம்நகரில் இருந்து 28 கி.மீ., தொலைவில் கவுடகெரே உள்ளது. பஸ் வசதி, ரயில் வசதி உள்ளது. தனியார் வாகனங்களிலும் செல்லலாம். – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar