காமாட்சி அம்மன் கோவிலில் ஜெயேந்திரர் 90வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2024 05:07
புதுடில்லி; காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 90வது ஜெயந்தி விழா, அசப் அலி சாலையில் அமைந்துள்ள தேவி காமாட்சி அம்மன் கோவிலில் நடந்தது.
காலை 7:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. சங்கல்பம், புண்யாஹவாசனம், கலச ஸ்தாபனம் நடந்தது. காலை 8:30 மணிக்கு ரித்விக்குகள் மஹன்யாஸ ஜபம், ஏகாதச ருத்ர பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து, ஆதிசங்கரருக்கு கலச அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டது. ருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, புஷ்பாஞ்சலி நடத்தப்பட்டன. விநாயகர், அம்பாள் மற்றும் சிவன் சன்னதிகள் சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தோடகாஷ்டகத்துடன் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆன்மிக பங்களிப்பு குறித்து கோவில் நிர்வாகி பொள்ளாச்சி கணேசன் பேசினார் மாலையில், உபநிஷத் வேத பாராயணம் மற்றும் பாதுகை பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் படத்துடன் மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்த்தில் ஊர்வலம் நடந்தது.